Sunday, September 12, 2010

யாழ்.குடாநாட்டின் அபிவிருத்தி தொடர்பான அரச கூட்டங்களில் கூட்டமைப்பு பங்கு பற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

2010-09-12 07:26:07   
குடாநாட்டின் அபிவிருத்தி மற்றும் மீள் குடியமர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து அரசாங்கம் நடத்தும் கூட்டங் களில் பங்கேற்பது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்ந்திரன்.


யாழ்ப்பாணம்,செப்.12
குடாநாட்டின் அபிவிருத்தி மற்றும் மீள் குடியமர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து அரசாங்கம் நடத்தும் கூட்டங் களில் பங்கேற்பது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித் தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று யாழ்.செயலகத்தில் நடத்தவுள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்று இன்றைய கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளவிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தாமும் பங்குபற்ற விருப்பதாக கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெற வுள்ள மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீள் குடியமர்வு மீளாய்வுக் கூட்டத்தில் பங்கு பற்றுவீர்களா என சுரேஷ் பிரேமச்சந்திரனி டம் கேட்டபோது
கொழும்பில் கடந்த மாத இறுதியில்  நடைபெற்ற சந்திப்பில் பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ செப் ரெம்பர் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்து எமது உறுப்பினர்களுடன் மீள்குடியமர்வு குறித்து ஆராய்வதெனவும்
அதன் பின்னர் வலி.வடக்கில்  மீளக் குடியமர்த்தப்படும் இடங்களை நேரில் பார்வையிடுவது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் கூட்டம் ஒத்திவைக் கப்பட்டதாக திடீரென அறிவிக்கப்பட்டது.
அதே கூட்டம் மீண்டும் யாழ்ப்பாணத் தில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை.
அழைப்புக் கிடைத்தால் கூட்டத்தில் பங்குபற்றுவோம்  என்றார் சுரேஷ் பிரே மச்சந்திரன்.     
ஃஃஃஃஃஃஃஉதயன் செய்தியை மேற்கோள்காட்டி இச்செய்தி இடப்படுகின்றதுஃஃஃஃஃஃஃஃஃஃஃ

No comments:

Post a Comment